தொழிலாளி கழுத்தை அறுத்த போதை ஆசாமிகளுக்கு வலை

Added : ஜன 09, 2023 | |
Advertisement
மயிலாப்பூர்,:மயிலாப்பூர், ராதாகிருஷ்ணன் சாலை, சவேரா ஹோட்டல் எதிரிலுள்ள மேம்பாலத்தின் கீழ் தங்கி, கூலி வேலை பார்ப்பவர் ஏழுமலை,50.மெரினா கடற்கரை, விவேகானந்தர் இல்லம் எதிரில், சாலையில் தங்கி இருப்பவர்கள் ஆனந்த், 45, டைலர், 46. இவர்கள் போதையில் அடிக்கடி, ஏழுமலையிடம் பணம் கேட்டு வாங்குவர்.நேற்று முன்தினம் இரவு, ஏழுமலை சைக்கிளில் ராதாகிருஷ்ணன் சாலை வழியாக வந்த போது, ஆனந்த், டைலர்



மயிலாப்பூர்,:மயிலாப்பூர், ராதாகிருஷ்ணன் சாலை, சவேரா ஹோட்டல் எதிரிலுள்ள மேம்பாலத்தின் கீழ் தங்கி, கூலி வேலை பார்ப்பவர் ஏழுமலை,50.

மெரினா கடற்கரை, விவேகானந்தர் இல்லம் எதிரில், சாலையில் தங்கி இருப்பவர்கள் ஆனந்த், 45, டைலர், 46. இவர்கள் போதையில் அடிக்கடி, ஏழுமலையிடம் பணம் கேட்டு வாங்குவர்.

நேற்று முன்தினம் இரவு, ஏழுமலை சைக்கிளில் ராதாகிருஷ்ணன் சாலை வழியாக வந்த போது, ஆனந்த், டைலர் ஆகியோர் போதையில் வழிமறித்து, குடிக்க பணம் கேட்டுள்ளனர்.

அவர் பணம் தர மறுத்ததால், ஆத்திரமடைந்த டைலர், தன் கையில் வைத்திருந்த பிளேடால், ஏழுமலையின் கழுத்தை அறுத்தார்.

பின், இருவரும் அங்கிருந்து தப்பினர். ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடிய ஏழுமலையை, அங்கு பணியில் இருந்த போக்குவரத்து உதவி ஆய்வாளர் சரவணன் காப்பாற்றி, ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தார்.

இதுகுறித்த புகாரின்படி, மயிலாப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, தப்பிச் சென்ற இருவரையும் தேடி வருகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X