வேளச்சேரி ரயில்வே சாலை, 3 கி.மீ., துாரம் உடையது. சாலையின் இருபகுதியிலும், 2 அடி அகலத்தில் கட்டப்பட்டுள்ள வடிகாலை முறையாக பராமரிப்பது இல்லை. வடிகால் மேல்பகுதியை நடைபாதையாகவும் பயன்படுத்துவதால், நடைபயிற்சி செய்கிறோம்.
ஆனால், ஆங்காங்கே மேல், 'சிலாப்' பெயர்ந்து வடிகால் நிறந்த நிலையில் உள்ளது. இதனால், அதிகாலை நடைபயிற்சி செய்ய அச்சமாக உள்ளது. புதிதாக இந்த சாலை வழியாக நடந்து செல்பவர்களும், வடிகால் பள்ளத்தில் விழுந்து விபத்தில் சிக்க வாய்ப்புள்ளது. அசம்பாவிதம் நடைபெறும் முன், வடிகால் மீது 'சிலாப்' போட்டு மூட வேண்டும்.
- என்.ராமமூர்த்தி, வேளச்சேரி