சென்னை, :புகையில்லா போகி குறித்து, விமான நிலை அதிகாரிகள் கூறியதாவது:
கடந்த 2018ல், போகியின்போது, பொதுமக்கள் மற்றும் விமான நிலையம் அருகே குடியிருப்போர், தேவையில்லாத பொருட்களை எரித்ததால், சென்னை விமான நிலையத்தை சுற்றிலும், வானம் புகையால் சூழப்பட்டது.
இதன் காரணமாக, விமான சேவையில், தாமதம், ரத்து, வேறு விமான நிலையங்களுக்கு திருப்பி விடுதல் என, 73 புறப்பாடு சேவை, 45 வருகை சேவை பாதிக்கப்பட்டது.
இதையடுத்து விழிப்புணர்வு காரணமாக, மூன்று ஆண்டுகளாக போகிப் பண்டிகையில், விமான சேவையில் எந்த இடையூறும்ஏற்படவில்லை.
இந்த முறையும் பாதிப்பு ஏற்படாமல் இருக்க, விமான நிலையத்தை சுற்றி குடியிருப்போர், தேவையில்லாத பொருட்களை எரிக்க வேண்டாம். விமான செயல்பாடுகள் பாதிக்கும். எனவே, புகைமூட்டம் இல்லாத போகியை கொண்டாடுவோம்.
இவ்வாறு அவர் கூறினர்.