கண்ணகி நகர், ஓ.எம்.ஆர்., கண்ணகி நகர், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பு வளாகம், 240 ஏக்கர் பரப்புடையது. இங்கு, 23 ஆயிரத்து 704 வீடுகள் உள்ளன.
இங்குள்ள, 2 ஏக்கர் இடத்தை பசுமையாக்க, 4,000 நாட்டு மரக்கன்றுகள் நட முடிவு செய்யப்பட்டன.
'பேபால்' என்ற ஐ.டி., நிறுவனம் நிதி உதவியில், அப்துல்கலாம் மக்கள் நலச்சங்கம், எக்ஸ்னோரா இணைந்து, மரக்கன்று நட்டு பராமரிக்கப்படுகிறது. முதற்கட்டமாக நேற்று, வேம்பு, புங்கை, வில்வம் உள்ளிட்ட, 36 வகையான, 1,500 மரக்கன்றுகள் நடப்பட்டன.
ஒவ்வொரு மரக்கன்றும், 5 அடி இடைவெளியில் நடப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், மக்கள் பிரதிநிதிகள், காவல் துறையினர், ஐ.டி., ஊழியர்கள், பள்ளி மாணவ - மாணவியர் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர். அடுத்த கட்டமாக, 2,500 மரக்கன்றுகள் நடப்பட உள்ளன.
Advertisement