சென்னை, கவர்னர் மாளிகை முன், தீக்குளிக்க முயன்ற நபரை, போலீசார் கைது செய்தனர்.
தென்காசியைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன், 50. மயிலாப்பூரில் உள்ள ஒரு ஜூஸ் கடையில் பணி புரிகிறார். நேற்று மாலை, பெட்ரோல் கேனுடன் கிண்டி கவர்னர் மாளிகை முன் சென்றார்.
திடீரென, தன் உடம்பில் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்ற அவரை, அங்கிருந்த போலீசார் தடுத்தனர். பின், கிண்டி போலீசில் ஒப்படைத்தனர்.
சட்டசபையில் கவர்னர் வெளி நடப்பு செய்ததற்கும், தமிழை ஒழுங்காக பேசாததால், தீக்குளிக்க முயன்றதாக போலீசிடம் கூறினார். அவரை கைது செய்த போலீசார், தொடர்ந்து விசாரிக்கின்றனர்.