பட்டாபிராம் ஆவடி அடுத்த பட்டாபிராம் வள்ளலார் நகரைச் சேர்ந்தவர் சுப்ரமணி, 42. இவரது மகன் அபினேஷ், 19. இவர் நேற்று முன்தினம் மாலை, அதே பகுதியைச் சேர்ந்த நண்பர் மோசஸ், 16, என்பவருடன், 'டியோ' இருசக்கர வாகனத்தில் வண்டலுார் -- மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் அதிவேகமாக சென்றார்.
அப்போது, கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம், நெமிலிச்சேரி அருகே, சாலை ஓரத்தில் இருந்த தடுப்பு சுவரில் மோதியது.
இதில் அபினேஷ் உயிரிழந்தார். பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மோசஸ், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.