வியாசர்பாடி,
வியாசர்பாடி, எம்.கே.பி.நகர் 17வது குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் தலசராம். இவரது மகன் நிக்கில், 14. இவர் யானைகவுனியில் உள்ள தனியார் பள்ளியில் 8ம் வகுப்பு படிக்கிறார்.
இவர் யானைகவுனி சாலை, ராமலிங்கம் கோவில் அருகே நடந்து வந்த போது, அவ்வழியே பைக்கில் வந்த மூவர் நிக்கிலை தாக்கி, மொபைல் போன் மற்றும் ஸ்மார்ட் 'வாட்ச்' பறித்து கொண்டு, இருசக்கர வாகனத்தில் தப்பிச் செல்ல முயன்றனர்.
நிக்கில் வண்டி சாவியை எடுத்து வைத்து கொண்டதால், வண்டியை அங்கேயே விட்டு மூவரும் தப்பினர். படுகாயமடைந்த நிக்கில், அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.
இது குறித்து வியாசர்பாடி போலீசார் விசாரிக்கின்றனர்.