திருநெல்வேலி : தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலை சேர்ந்த 39 வயது பெண்ணின் கணவர் சில ஆண்டுகளுக்கு முன் இறந்தார். குடும்பச்சூழலால் அப்பெண் வேலைக்காக திருநெல்வேலி வந்தார். வண்ணார்பேட்டை ஆட்டோ டிரைவர் முருகன் 44, அவருக்கு உதவ முன்வந்தார்.
நேற்று முன்தினம் முருகன் ஆட்டோவில் அப்பெண்ணை செங்கல் சூளை அழைத்து சென்றார். அங்கு ஏற்கனவே இருந்த அவரது நண்பர்கள் மூவர் சேர்ந்து பெண்ணிடம் கூட்டுபலாத்காரத்தில் ஈடுபட்டனர். மறுத்த அவரை தாக்கினர். அவர்களிடமிருந்து தப்பிய பெண் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். முதலுதவிக்கு பிறகு அவரிடம் திருநெல்வேலி அனைத்து மகளிர் போலீசார் புகார் பெற்றனர்.
அதனடிப்படையில் முருகன், வண்ணார்ப்பேட்டை மணிகண்டன் 32, பேராட்சி 31, அய்யாசாமி 32, ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.