சுகாதாரம் பாதிப்பு
உடுமலை கொழுமம் அமராவதி ஆற்று கரையில், குப்பை கொட்டபட்டுள்ளன. இதனால், அப்பகுதி முழுவதும் சுகாதாரம் பாதிக்கப்படுகிறது. துர்நாற்றம் வீசுகிறது. நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, இக்குப்பையை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- செல்வம், உடுமலை.
சீரமைப்பது எப்போது?
உடுமலை அருகே கொங்கல்நகரத்தில், ஊராட்சி சார்பில் அமைக்கப்பட்ட உரக்குடில் செயல்படாமல் பயன்பாடின்றி கிடக்கிறது. இதை பார்க்கும் அப்பகுதி மக்கள் வேதனையடைந்துள்ளனர். எனவே, இதை சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.
- சிவக்குமார், உடுமலை.
போக்குவரத்துக்கு இடையூறு
உடுமலை கொழுமம் ரோடு, தனியார் மார்க்கெட் அருகே உள்ள பேக்கரிக்கு வரும் இரண்டு, நான்கு சக்கர வாகனங்கள் சாலையிலேயே நிறுத்தப்படுகின்றன. இதனால், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. இதற்கு போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- ஆனந்த், உடுமலை.
போலீசார் கவனத்துக்கு
உடுமலை பஸ் ஸ்டாண்டுக்குள், பஸ்கள் மட்டும் தான் செல்ல வேண்டும். ஆனால், இருசக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள் உள்ளே சென்று திரும்புகின்றன. இதனால், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. விபத்துகளும் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, இந்த வாகனங்கள் செல்ல தடை விதிக்க வேண்டும்.
- சந்தோஷ், உடுமலை.
போக்குவரத்து நெரிசல்
உடுமலை பஸ் ஸ்டாண்ட் பழைய பஸ் ஸ்டாண்ட் வரை, ரோட்டில் இருபுறங்களிலும் வாகனங்கள் தாறுமாறாக நிறுத்தப்படுகின்றன. இதனால், பிற வாகனங்கள் செல்ல முடிவதில்லை. போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதை போலீசார் முறைப்படுத்த வேண்டும்.
- சங்கர், உடுமலை.
சேதமடைந்த ரோடு
உடுமலை அருகே தளியில், பஸ் ஸ்டாப் முதல் போலீஸ் ஸ்டேஷன் வரை ரோடு குண்டும், குழியமாக காணப்படுகிறது. இதனால், வாகனங்களில் செல்வோர் கடும் பாதிப்புக்குள்ளாகின்றனர். இந்த ரோட்டை பேரூராட்சி நிர்வாகத்தினர் சீரமைக்க வேண்டும்.
- முருகன், உடுமலை.
வாகன ஓட்டுனர்கள் அவதி
உடுமலை பொள்ளாச்சி ரோடு, முக்கோணம் முதல் வெனசுப்பட்டி செல்லும் ரோட்டில், பாலம் கட்டுமான மணி நடக்குமிடத்தில், ரோடு சேதமடைந்துள்ளது. இதனால், இருசக்கர வாகனங்களில் செல்வோர் கடும் பாதிப்புக்குள்ளாகின்றனர். இந்த ரோட்டை சீரமைக்க வேண்டும்.
- ராமசாமி, உடுமலை.
நிழற்கூரை பராமரிப்பில்லை
உடுமலை அருகே, பொட்டி நாயக்கனுார் பஸ் ஸ்டாப் நிழற்கூரை பராமரிப்பு இல்லாமல் உள்ளது. இதனால், அப்பகுதி மக்கள் இதை பயன்படுத்த முடியாத நிலை ஏற்படுகிறது. வெயிலில் நின்று பஸ் ஏற வேண்டியதுள்ளது. இதை ஊராட்சி நிர்வாகத்தினர் சீரமைக்க வேண்டும்.
- திருமலைச்சாமி, உடுமலை.
குடிநீர் தொட்டி சேதம்
ஜல்லிபட்டி ஊராட்சி சந்தனக்கருப்பனுாரில், குடிநீர் தொட்டி பராமரிப்பு இல்லாமல், இடியும் நிலையில் உள்ளது. இதனால், அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். குடிநீர் வினியோகமும் பாதிக்கப்படும் நிலை உள்ளது. எனவே, குடிநீர் தொட்டியை ஊராட்சியினர் சரிசெய்ய வேண்டும்.
- மோகன், உடுமலை.
ஓடையில் கழிவுகள்
பெதப்பம்பட்டி உப்பாறு ஓடையில், இறைச்சிக்கழிவுகள் வீசிச்செல்கின்றனர். இதனால் துர்நாற்றம் வீசுகிறது. நோய் பரவவும் வாய்ப்புள்ளது. இக்கழிவுகளை அகற்றுவதோடு, அதை வீசுபவர்கள் மீது பொதுப்பணித்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- கருணாகரன், உடுமலை.