புவனகிரி : கடலுார் மாவட்டம், புவனகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த பிளஸ் 2 மாணவர்கள் ஐந்து பேர் சீருடையுடன், புவனகிரியில் உள்ள தியேட்டருக்கு படம் பார்க்க வந்திருந்தனர்.
தியேட்டர் வாசலில் நின்றிருந்த மாணவர்களை பார்த்த போலீசார் அவர்களை காவல் நிலையம் அழைத்துச் சென்றனர்.
பின், அந்த மாணவர்களின் பெற்றோர்களை வரவழைத்து, மாணவர்களை, திருக்குறள் எழுத சொன்னார்கள். திருக்குறள் தெரியாமல் விழித்த மாணவர்களிடம், தமிழ் எழுத்துக்களையாவது எழுதுமாறு கூறினர்.
அவர்கள் எழுதிய பேப்பரை படித்த பெற்றோர், பிளஸ் 2 படிக்கும் தங்கள் பிள்ளைகளுக்கு திருக்குறள் மற்றும் உயிர்மெய் எழுத்துகள் தெரியாததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின், மாணவர்களுக்கு அறிவுரை கூறி, பெற்றோர்களுடன் அனுப்பி வைத்தனர்.