உடுமலை:'தரிசாக காணப்படும் கோவில் நிலத்தை சீரமைத்து, மாற்று பயன்பாட்டுக்கு வழங்கலாம்,' என கிராம மக்கள் சார்பில், தமிழக அரசுக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளனர்.
இது குறித்து, உடுமலை பெரியகோட்டை ஸ்ரீராம்நகர், வாசவிநகர் மற்றும் சுற்றுப்பகுதி குடியிருப்பு மக்கள் சார்பில், தமிழக அரசுக்கு அனுப்பியுள்ள மனு:
உடுமலை பிரசன்ன விநாயகர் கோவிலுக்கு சொந்தமான நிலம், பெரியகோட்டை கிராமத்தில் உள்ளது. சுமார், 13.30 ஏக்கர் பரப்புடைய நிலம் எவ்வித பயன்பாடும் இல்லாமல், தரிசாக விடப்பட்டுள்ளது.
இதனால், அப்பகுதியில், குப்பை கொட்டுவது உள்ளிட்ட சமூக விரோத செயல்கள் நடைபெறுகிறது.
இதைத்தவிர்க்க, கோவில் நிலத்தை சீரமைத்து, மாற்று பயன்பாட்டுக்கு வழங்க வேண்டும். மேலும், அவ்விடத்தில், தோட்டக்கலைத்துறை பூங்கா மற்றும் நாற்றுப்பண்ணை அமைக்க, கருத்துரு அரசுக்கு அனுப்பியுள்ளனர்.
அந்த கருத்துரு அடிப்படையில், நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.