பந்தலுார்:நெல்லியாளம் நகராட்சியில் அதிகாரிகளுக்கு தெரியாமல் மன்ற கூட்டம் நடந்தது.
நகர மன்ற தலைவர் சிவகாமி, துணை தலைவர் நாகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டம் நடத்துவது குறித்து, நகராட்சி கமிஷனர் மற்றும் பொறியாளர் உள்ளிட்ட அதிகாரிகள் யாருக்கும் தகவல் தெரிவிக்கவில்லை.
அதில், ஒப்பந்த பணிகளை தி.மு.க., நிர்வாகிகள் கேட்கும் நிலையில் அவர்களுக்கு வழங்குவது குறித்து விவாதிக்கப்பட்டது.
கமிஷனர் மகேஸ்வரி கூறுகையில்,''எந்த முன்னறிவிப்பும் இன்றி தீர்மானங்கள் ஏதும் நிறைவேற்றாமல் தனிப்பட்ட முறையில் கூட்டம் நடத்துவதை ஏற்க முடியாது,'' என்றார்.