''ஆவின் விவகாரத்துல, ரெண்டு அதிகாரிகளுக்கு சிக்கல் வந்திருக்குது பா...'' என்றபடியே, பெஞ்சில் அமர்ந்தார் அன்வர்பாய்.
''விளக்கமா சொல்லுங்க...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.
''கடந்த, 2021 பிப்ரவரி மாசம், அ.தி.மு.க., ஆட்சியின் கடைசி கட்டத்துல, தமிழகம் முழுக்க ஆவின்ல, 236 பதவிகளுக்கு ஆட்களை நியமிச்சாங்க... இதுக்கு, பல லட்சம் ரூபாய் கைமாறியதா புகார்கள் எழுந்துச்சு பா...
![]()
|
''இப்ப தி.மு.க., அரசு விசாரணை நடத்தி, 201 பேரை, 'டிஸ்மிஸ்' பண்ணிடுச்சு... இந்த நியமனங்களுக்கு, சென்னை ஆவின் தலைமை அலுவலகத்துல பணிபுரியும், சட்டப்பிரிவு துணை பதிவாளர், தலைமையிட துணை பதிவாளர் ஆகிய இரண்டு அதிகாரிகள் தான் மூளையா இருந்திருக்காங்க பா...
''இந்த ரெண்டு அதிகாரிகள் தான், புதிய நியமனங்களுக்கான பணி வரம்புகளை உருவாக்கி குடுத்திருக்காங்க... இதை வச்சு தான், மாவட்ட வாரியா நியமனமும் நடந்திருக்குது... இப்ப, இந்த அதிகாரிகளிடமும் விசாரணை துவங்கிடுச்சு பா...'' என்றார், அன்வர்பாய்.