திருவனந்தபுரம்,கேரளாவில் கார் - லாரி நேருக்கு நேர் மோதிய விபத்தில், மாநில உள்துறை செயலர், அவரது மனைவி, மகன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.
கேரள மாநிலத்தின் கொச்சியில் இருந்து திருவனந்தபுரம் நோக்கி நேற்று அதிகாலை சென்ற காரில், மாநில உள்துறைச் செயலர் வேணு, கூடுதல் தலைமைச் செயலரான அவரது மனைவி சாரதா, அவர்களது மகன் மற்றும் உறவினர்கள் பயணம் செய்தனர்.
காயம்குளம் அருகே கார் வந்த போது, எதிரே வந்த லாரியுடன் நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் வேணு, அவரது மனைவி, மகன் மற்றும் டிரைவர் படுகாயம் அடைந்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அனைவரையும் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவரை போலீசார் கைது செய்தனர்.