விமானத்தில் மது அருந்திய இருவர் அதிரடியாக கைது

Added : ஜன 10, 2023 | |
Advertisement
பாட்னா, புதுடில்லியில் இருந்து பாட்னா சென்ற விமானத்தில் மது அருந்திய இருவரை போலீசார் கைது செய்தனர். பீஹாரைச் சேர்ந்த நிதிஷ் மற்றும் ராகுல் ஆகிய இளைஞர்கள் நேற்று முன்தினம் புதுடில்லியில் இருந்து பாட்னா செல்லும் விமானத்தில் பயணித்தனர். அப்போது அவர்கள் விமானத்திலேயே மது அருந்தியதாகக் கூறப்படுகிறது. இது குறித்து விமான ஊழியர்கள், பாட்னா விமான நிலைய போலீசாருக்கு



பாட்னா, புதுடில்லியில் இருந்து பாட்னா சென்ற விமானத்தில் மது அருந்திய இருவரை போலீசார் கைது செய்தனர்.

பீஹாரைச் சேர்ந்த நிதிஷ் மற்றும் ராகுல் ஆகிய இளைஞர்கள் நேற்று முன்தினம் புதுடில்லியில் இருந்து பாட்னா செல்லும் விமானத்தில் பயணித்தனர். அப்போது அவர்கள் விமானத்திலேயே மது அருந்தியதாகக் கூறப்படுகிறது.

இது குறித்து விமான ஊழியர்கள், பாட்னா விமான நிலைய போலீசாருக்கு தகவல் அளித்தனர். விமானம் தரையிறங்கிய பின், இருவரும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப் பட்டனர்.

இதில், அவர்கள் மது அருந்தியிருந்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டனர். மது அருந்திய பின், விமானத்தில் ஊழியர்கள் மற்றும் பயணியரிடம், இளைஞர்கள் சேட்டையில் ஈடுபட்டனரா என்பது குறித்து விசாரணை நடத்தப்படுகிறது.

'ஏர் இந்தியா' விமானத்தில் பெண் பயணியிடம் அநாகரிகமாக நடந்து கொண்ட சங்கர் மிஸ்ரா என்ற தொழில் அதிபர் சமீபத்தில் கைது செய்யப்பட்ட நிலையில், விமானத்தில் மது அருந்திய இருவரை போலீசார் கைது செய்துள்ளதுபரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X