சென்னை: சட்டசபையில் கவர்னர் ஆர்என் ரவி நேற்று தமிழக அரசு அச்சடித்த சில வார்த்தைகளை தவிர்த்தார். இதனால் சபையில் பெரும் எதிர்ப்பு கிளம்பியது. அவசர, அவசரமாக முதல்வர் ஸ்டாலின் கண்டன தீர்மானத்தை நிறைவேற்றினார். திமுக கூட்டணி கட்சியினர் வெளிநடப்பு செய்தனர். இந்நிலையில் சென்னையில் பல இடங்களில் கவர்னருக்கு எதிராக போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. வள்ளூவர் கோட்டத்தில் கவர்னரே வெளியேறு என்ற வாசகங்கள் காணப்பட்டன.
சில இடங்களில் கவர்னருக்கு ஆதரவாக பா.ஜ., வினர் போஸ்டர் ஒட்டியுள்ளனர்.