வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சட்டசபையில் நேற்று கவர்னர் உரையாற்றி முடித்த பின், அவர் பேசிய சில கருத்துக்கள், சபைக் குறிப்பில் இடம் பெற வேண்டாம் என்றும், அவர் உரையில் படிக்காமல் விட்ட விஷயங்கள் இடம்பெற வேண்டும் என்றும், முதல்வரின் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது, இதுவே முதன்முறை.

சபையில் இருக்கும்போதே, தன் பேச்சுக்கு எதிராக, முதல்வர் தீர்மானம் கொண்டு வந்ததால், அவமானமாக கருதி, கவர்னர் கோபமாக வெளியேறியதும் முதன்முறை.
கவர்னர் சபைக்கு வரும்போதும், அவர் வெளியில் செல்லும்போதும், முதல்வர், அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்கள் எழுந்து நிற்பது வழக்கம். நேற்று கவர்னர் ரவி வெளியேறியபோது, அமைச்சர்கள் உட்பட பலர் எழுந்திருக்காததும் இதுவே முதன்முறை.

கவர்னர் உரையை எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பது வழக்கமானது. நேற்று, ஆளுங்கட்சியின் கூட்டணி கட்சிகள், கவர்னர் உரையை புறக்கணித்தன. எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சபையில் அமர்ந்திருந்தனர்.
கவர்னர் வெளியேறியபோது, அவருக்கு எதிராக ஆளுங் கட்சி எம்.எல்.ஏ.,க்கள் எழுந்து கோஷமிட்டதும், இதுவே முதன்முறை.
கவர்னர் வெளியே சென்றபோது, அவருடன் சபாநாயகர், சட்டசபை செயலர் செல்லாததும் முதன் முறை.