உடுமலை:திருப்பூர் மாவட்ட நகர் ஊரமைப்புத்துறையில், உள்ளூர் திட்டக்குழுமம், நகர் ஊரமைப்பு பணிகள் ஒருங்கிணைக்கப்பட்டன. உதவி இயக்குனரே, தலைமை அலுவலராக நியமிக்கப்பட்டிருந்தார்.
இருப்பினும், திருப்பூர் மாவட்டத்துக்கு நிரந்தர உதவி இயக்குனர் நியமிக்கப்படவே இல்லை. மாறாக, இரண்டு மாவட்டங்களை கவனித்து வந்த உதவி இயக்குனர்களிடம், கூடுதல் பொறுப்பாக திருப்பூர் ஒப்படைக்கப்பட்டிருந்தது.
வளர்ந்து வரும் திருப்பூர் மாவட்டத்தில், ஏராளமான கோப்புகள் தேக்கமடைந்துள்ளதால், பெரும்பாலான பணிகள் ஸ்தம்பித்தன.
மாவட்டத்துக்கு நிரந்தரமான உதவி இயக்குனரை நியமிக்க வேண்டுமென, பொதுமக்கள் வலியுறுத்தி வந்தனர். நீண்ட இடைவெளிக்குப்பிறகு, திருப்பூர் மாவட்டத்துக்கு, நகர் ஊரமைப்புத்துறை உதவி இயக்குனராக, புஷ்ப ராஜ் நியமிக்கப்பட்டுள்ளார்.