உடுமலை:கோவை - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில், உடுமலை அமைந்துள்ளது. இங்கு, பொள்ளாச்சி ரோடு, பழநி ரோடு, தளி ரோடு, திருப்பூர் ரோடு உட்பட முக்கிய பிரதான ரோடுகள் உள்ளன. இந்த ரோடுகளில், வாகனங்கள் தாறுமாறாக நிறுத்தப்படுகின்றன. இதனால், அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சில சமயங்களில் விபத்துகளும் ஏற்பட்டு வருகின்றன.
குறிப்பாக, பள்ளி, கல்லுாரி, அலுவலகம் துவங்கும், முடியும் காலை, மாலை நேரங்களில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலில் வாகன ஓட்டுனர்கள், பொதுமக்கள் சிக்கித்தவிக்கின்றனர்.
எனவே, இடையூறாக நிறுத்தப்படும் வாகனங்கள் மீது, போலீசார் நடவடிக்கை எடுத்து அபராதம் விதிக்க வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.