குன்னுார்;குன்னுார் அருகே உபதலை ஊராட்சி அவசர கூட்டம், தலைவர் பாக்கியலட்சுமி தலைமையில் நடந்தது.
கூட்டத்தில், 'ஊராட்சியின் குடிநீர் திட்ட பணி உட்பட பல்வேறு கோப்புகளில் கையெழுத்திட அலுவலகத்துக்கு வராமல், வேறு இடத்திற்கு கொண்டு வர கூறி பேரம் பேசும் துணை தலைவர் செல்வகுமார், 4 நாட்கள் கழித்து கையெழுத்திடுகிறார்,' என, குற்றம் சாட்டப்பட்டது.
இவரை பதவி நீக்கம் செய்ய கவுன்சிலர்கள், ஜெயராணி, மணி, சந்திரன், ஷோபனா, பிந்து, தணிகாசலம், சிவசாமி, மஞ்சுளா உட்பட, 9 பேர் கையெழுத்திட்டு, தீர்மானம் நிறைவேற்றினர்.
இதன் நகல், மாவட்ட கலெக்டர், வட்டார வளர்ச்சி அலுவலர், குன்னுார் தாசில்தாருக்கு அனுப்பப்பட்டது.
வட்டார வளர்ச்சி அலுவலர் மோகன் குமாரமங்கலம் கூறுகையில்,''இந்த புகார் தொடர்பாக தாசில்தார் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தி, மாவட்ட கலெக்டருக்கு அனுப்பப்படும். மாவட்ட கலெக்டர் இது தொடர்பான முடிவை அறிவிப்பார்,'' என்றார்.