மூலிகை கண்காட்சி
மதுரை: பாத்திமா கல்லுாரியில் தமிழ்த்துறை சார்பில் மூலிகை மருத்துவக் கண்காட்சி, சித்த மருத்துவம் விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது. தமிழ்த்துறைத் தலைவர் லதா வரவேற்றார்.
சித்த மருத்துவர் பாப்பிகமலா பேசுகையில், ''மூலிகை மருத்துவத்தை மாணவர்கள் கற்றால் தங்களை நோயில் இருந்து தற்காத்து கொள்ள முடியும். சித்த மருத்துவம் மூலம் பெண்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி கொள்ள முடியும்'' என்றார். மாணவிகள் தயாரித்த மூலிகை உணவு வகைகள், குடிநீர் வகைகள், சூரணங்கள், சித்த மருத்துவ நுால்கள் கண்காட்சியில் இடம்பெற்று இருந்தன.
சித்தா நாள் விழா
மதுரை: சரஸ்வதி நாராயணன் கல்லுாரியில் யு. ஜி. சி. உத்தரவுபடி என்.எஸ்.எஸ்., சார்பில் சித்தா நாள் விழா கொண்டாடப்பட்டது. முதல்வர் கண்ணன் தலைமை வகித்தார். என்.எஸ்.எஸ்., ஒருங்கிணைப்பாளர் விஜயகுமார் வரவேற்றார். வலையங்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய சித்த மருத்துவர் லதாராணி, சுகாதார மேற்பார்வையாளர் தங்கச்சாமி பேசினர். பேராசிரியர் ராமகிருஷ்ணன் நன்றி கூறினார்.
மதுரை: மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரி உணவு மற்றும் பால்வள தொழில்நுட்பத் துறை சார்பில் சித்தா தின விழா கொண்டாடப்பட்டது. முதல்வர் வெங்கடேஸ்வரன் தலைமை வகித்தார். சித்த மருத்துவம், உணவு மற்றும் ஊட்டச்சத்து கண்காட்சியை செயலாளர் விஜயராகவன் திறந்து வைத்தார். உள்தர மதிப்பீட்டு குழு ஒருங்கிணைப்பாளர் ராமசுப்பையா, இயக்குனர் பிரபு, துறை தலைவர் கோபி மணிவண்ணன் முன்னிலை வகித்தனர். சித்த மருத்துவர் ரகுராமன் பேசினார். கல்லுாரி ஊட்டச்சத்து நிபுணர் ராக தீபா நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.