மதுரை : மதுரை காமராஜ் பல்கலை கல்லுாரிகளுக்கு இடையிலான ஹேண்ட்பால் போட்டியில் மதுரை அமெரிக்கன் கல்லுாரி சாம்பியன் பட்டம் வென்றது.
பல்கலை 'ஏ' மண்டல சாம்பியன் அமெரிக்கன் கல்லுாரி, 'பி' சாம்பியன் வெள்ளைச்சாமி நாடார் கல்லுாரி, 'சி' சாம்பியன் திண்டுக்கல் ஜி.டி.என். கல்லுாரி, 'டி' சாம்பியன் விருதுநகர் வி.எச்.என்.எஸ்.என்., கல்லுாரிகள் லீக் முறையில் பங்கேற்றன.அமெரிக்கன் கல்லுாரி 50 - 38 புள்ளிகளில் வி.எச்.என்.எஸ்.என்., கல்லுாரியையும், 55 - 12 புள்ளிகளில் வெள்ளைச்சாமி நாடார் கல்லுாரியையும், 50 - 39 புள்ளிகளில் ஜி.டி.என்., கல்லுாரியையும் வீழ்த்தியது.
அனைத்து போட்டிகளிலும் வென்று, முதல் முறையாக சாம்பியன் பட்டம் பெற்று கள்ளந்திரி நடராஜன் நினைவு கோப்பையை வென்றது. கல்லுாரி முதல்வர் தவமணி கிறிஸ்டோபர், துணை முதல்வர் மார்ட்டின் டேவிட், நிதி காப்பாளர் பியூலா ரூபிகமலம், உடற்கல்வி இயக்குநர்கள் பாலகிருஷ்ணன், மகேந்திரன் மாணவர்களை பாராட்டினர்.
ஜி.டி.என்., கல்லுாரி 53 - 11 புள்ளிகளில் வெள்ளைச்சாமி நாடார் கல்லுாரியையும், 52 - 28 புள்ளிகளில் வி.எச்.என்.எஸ்.என்., கல்லுாரியையும் வீழ்த்தி 2ம் இடம் பெற்றது. விருதுநகர் கல்லுாரி 34 - 13 புள்ளிகளில் வெள்ளைச்சாமி நாடார் கல்லுாரியை வென்று 3ம் இடம் பெற்றது.