விருதுநகர் : கலெக்டர் மேகநாதரெட்டி கூறியதாவது:
சென்னை பதிவுத்துறை தலைவர் சுற்றறிக்கையின் படி இந்திய முத்திரை சட்டம், வருவாய் மீட்பு சட்டத்தின் கீழும் நிலுவையில் உள்ள இனங்களை குறைத்திட 2023 ஜன. 1 முதல் மார்ச் 31 வரை வருவாய் மாவட்டம் தோறும் சிறப்பு முனைப்பு இயக்கம் நடத்த தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, ஆகிய வருவாய் மாவட்டங்களில் இந்திய முத்திரை சட்டங்களின் கீழும், வருவாய் மீட்பு சட்டத்தின் கீழும் நிலுவையில் உள்ள இனங்களை, சம்மந்தப்பட்ட ஆவணதாரர்கள் தங்கள்ஆவணத்திற்குண்டான குறைவு முத்திரை தீர்வையை விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில்,2ம் தளத்தில் இயங்கி வரும் தனித்துணை கலெக்டர் முத்திரை அலுவலகத்தில் செலுத்தி ஆவணத்தை விடுவித்து கொள்ளலாம், என்றார்.