வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை: தி.மு.க.,வின் ராஜ்யசபா எம்.பி.,யாக இருந்து, பதவிக்காலம் முடிந்த பின் மீண்டும் சீட் கிடைக்காமல், கட்சியாலேயே ஒதுக்கப்பட்டவர் ஆர்.எஸ்.பாரதி. இவர், திரும்பவும் திருந்தாமல், நாகரீகம் இல்லாமல் மேடையில், தமிழகத்தின் அரசியல்சாசன தலைவராக இருக்கும் கவர்னரை அவன், இவன், எச்சியிலை, என்றெல்லாம் வசைபாடி தனது வன்மத்தை கொட்டியுள்ளார். இது நடுநிலை பொது மக்களிடையே எதிர்ப்பை கிளப்பி உள்ளது.
ஆர்எஸ் பாரதி ஏக வசனத்தில் பேசுவது இது முதல்முறை அல்ல. கடந்தாண்டு நவம்பரில், திருநெல்வேலியில் நடந்த ஹிந்தி திணிப்பு எதிர்ப்பு தீர்மான விளக்க பொதுக்கூட்டத்தில், கவர்னர் ரவி மற்றும் தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலையை அவன், இவன் என ஏக வசனத்தில் பேசியதுடன், மெண்டல் எனவும் குறிப்பிட்டார். இது பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆர்எஸ் பாரதிக்கு கண்டனங்கள் குவிந்ததுடன், பொது மக்கள் அதிருப்தி இருந்தனர்.. ஆனாலும், ஆர்எஸ் பாரதி அதனை பொருட்படுத்தாமல், கவர்னரை அவன், இவன் எனக்குறிப்பிட்டு விமர்சித்துள்ளார்.
நிகழ்ச்சி ஒன்றில் ஆர்எஸ் பாரதி பேசும்போது, சட்டசபையில் நடந்த நிகழ்வுகளை வைத்து கவர்னரை ஒருமையில் ஏக வசனத்தில் விமர்சித்தார்.

அவர் பேசியதாவது: இன்னைக்கு சட்டசபையில் பேசிவிட்டு ஓடியிருக்கிறார். கொஞ்சம் கண்சாடை காட்டியிருந்தா வூட்டுக்கு போயிருக்க முடியுமா? எது கெடைக்குதோ தூக்கி அடிறானா அடிச்சுட்டு போயினேருப்பான். இதே கண்டி ஜெயலலிதா இருந்திருந்தா அந்தாளு ஒத வாங்கமா போயிருப்பானா?
எச்சியிலை எடுனா எட்டி நில்லாதனு சொல்லுவான். உனக்கு இலை எடுக்கிற வேலை மாதிரி கவர்னர் வேலை. சர்க்காரில் இருந்து உனக்கு அறிவித்திருக்கிறார்கள். நீ சமையல்காரன் வேலை. சமைச்சு போட்டு போயிற வேண்டியது தான் ஒன் வேலை. அத விட்டுட்டு, சாப்பாடு எல்லாம் தள்ளிட்டு, நீ வேறெதுனாலும் கொண்டாந்து வெப்பேன்னு சொன்னா பந்தியில இருக்கவன் சும்மா இருப்பானா? ஆட்டுக்கு தாடி எதுக்கு? நாட்டுக்கு கவர்னர் எதுக்குனு சொன்னார்.
அண்ணா சொன்னது ஒவ்வொன்னும் பொருந்தும். பொன்மொழி என்பதை... இன்னைக்கு அவர் பெயரையே எடுக்குறாங்க. ஒரு கால் இத சொன்னார் என்பதற்காகவே எடுத்தாரா என்னனு தெரியலை. அண்ணாவுடைய பெயர், பெரியாருடைய பெயர், பெருந்தலைவர் காமராஜரோடைய பெயர் , தமிழ்நாடு இதையெல்லாம் எடுத்துவிட்டு பேசக்கூடிய அளவுக்கு தைரியம் வந்துருக்குனு சொன்னால்... தைரியமில்லை. அந்தாளு கைகால் எல்லாம் உதறுது நான் பார்த்தேன்.
முதலமைச்சர் நினைத்திருந்தால், அவை முன்னவர் துரைமுருகனை எந்திருச்சு இந்த செக்சனை கோட் பண்ணி, கவர்னர் மீது ‛அவரை இந்த அவையிலேருந்து வெளியேற்றுகிறோம் வார்டன்களை வைத்து என்று அழைத்திருந்தால், என்ன கழட்டிட்டுருப்ப நீ?. இவ்வாறு ஆர்எஸ் பாரதி பேசியுள்ளார். இதற்கும் அவருக்கு கண்டனம் குவிந்து வருகிறது.