சாலையில் திரியும் மாடுகளால் விபத்து அபாயம்
வாலாஜாபாத்தில் இருந்து, ஒரகடம் மற்றும் சுங்குவார்சத்திரம் செல்லும் சாலைகளுக்கு இடையே உள்ள கிராமங்களில் மாடுகளை வளர்க்கும் கால்நடை விவசாயிகள், மேய்ச்சலுக்காக வெளியே விட்டு விடுகின்றனர்.
தீனிக்காக சாலையில் குறுக்கும் நெடுக்குமாக ஓடும் மாடுகளால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் நிலை உள்ளது.
எனவே, விபத்து ஏற்படுவதை தடுக்கும் வகையில், சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து, மாட்டின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க, சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை வேண்டும்.
- டி.மதனகோபால், காஞ்சிபுரம்.