காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சி பகுதியில் போகி பண்டிகையின் போது குப்பையை கொளுத்தி சுற்றுச்சூழல் மாசு அடைவதை தடுக்கும் வகையில் குப்பை கொளுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
சேகரமாகும் குப்பையை கொட்டுவதற்கு 16 இடங்களில் தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன.
காஞ்சிபுரம் மாநகராட்சியில் போகி பண்டிகை அன்று குப்பையை வீட்டின் வெளியில் கொளுத்தி மாசு அடைவதை தவிர்க்கும் வகையில் பொதுமக்கள் குப்பையை பொது இடங்களில் கொளுத்துவதற்கு தடை விதித்துள்ளது.
இதையடுத்து, மாநகராட்சியில் உள்ள 51 வார்டுகளில் உள்ள குடியிருப்புகள் மற்றும் வணிக நிறுவனங்களில் சேகரமாகும் குப்பையை கொளுத்தாமல் கொட்டுவதற்கு, 16 இடங்களில் குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன.
அதில் மக்கும் குப்பை தனியாகவும், மக்காத குப்பை தனியாகவும் கொட்டுவதற்கு தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன.
பொது மக்கள் போகி பண்டியின் போது குப்பை கழிவுகளை கொளுத்தாமல் குப்பைத் தொட்டியில் கொட்டுவதற்காக இந்த வசதி ஏற்படுத்தியுள்ளனர்.
மாநகராட்சியில், அந்தந்த பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த குப்பைத் தொட்டிகள் அனைத்தும் அகற்றப்பட்டன. பொது இடத்தில் கொட்டப்படும் குப்பையை பிரித்து துாய்மை பணியாளர்கள் மக்கும் குப்பையை உரம் தயாரிக்கவும், மக்காத குப்பையை மாநகராட்சி குப்பை கிடங்கிற்கும் கொண்டு செல்கின்றனர்.
போகி பண்டியையின் போது குப்பையை அந்த பகுதி மக்கள் ஓரிடத்தில் கொட்டுவதற்கு தற்காலிகமாக அந்தந்த பகுதியில் குப்பைத் தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன.
புகையில்லா போகி பண்டிகை கொண்டாட மாநகராட்சி கமிஷனர் கண்ணன் அறிவுறுத்தியுள்ளார்.