வாலாஜாபாத்:ராணிப்பேட்டை மாவட்டம், சகாயத்தோட்டம் கிராமத்தில் இயங்கும் தொன்பாஸ்கோ வேளாண் கல்லுாரி மாணவர்கள் குழுவாக படுநெல்லி கிராமத்தில் தங்கி, ஒரு மாத கால பயிற்சி பெற்று வருகின்றனர்.
நேற்று காலை, படுநெல்லி கிராமம் முன்னோடி விவசாயி சேகர் நிலத்தில், பல வித காய்கறி நாற்று நடவு செய்யும் பணி மற்றும் பலவித விதைகளை நடவு செய்தனர்.
இதில், தொன்பாஸ்கோ வேளாண் கல்லுாரி இறுதி ஆண்டு மாணவர்கள் பலர் பங்கேற்றனர். இவர்களுக்கு, பொறியியல் பட்டதாரியும், இயற்கை விவசாயியுமான கோகுல் ஆலோசனைகளை வழங்கினார்.