ஆன்லைனில் பணியாளர் சேர்க்கை 2 சதவீதம் உயர்வு

Added : ஜன 11, 2023 | |
Advertisement
மும்பை:ஆன்லைன் வாயிலாக நபர்களை பணியமர்த்துவது, கடந்த 2022 டிசம்பரில் 1 சதவீதம் குறைந்துள்ள போதிலும், மாதாந்திர அடிப்படையில் ஒப்பிடும்போது, 2 சதவீதம் உயர்ந்துள்ளதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.உலகளவில் பொருளாதார மந்த நிலை நீடித்து வருவதால், பெரும்பாலான நிறுவனங்கள், தங்களது நிறுவனங்களில் ஆட்குறைப்பு செய்து வருகின்றன. 13 சதவீத வளர்ச்சிமேலும் பல நிறுவனங்கள்,
 ஆன்லைனில் பணியாளர் சேர்க்கை 2 சதவீதம் உயர்வு

மும்பை:ஆன்லைன் வாயிலாக நபர்களை பணியமர்த்துவது, கடந்த 2022 டிசம்பரில் 1 சதவீதம் குறைந்துள்ள போதிலும், மாதாந்திர அடிப்படையில் ஒப்பிடும்போது, 2 சதவீதம் உயர்ந்துள்ளதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

உலகளவில் பொருளாதார மந்த நிலை நீடித்து வருவதால், பெரும்பாலான நிறுவனங்கள், தங்களது நிறுவனங்களில் ஆட்குறைப்பு செய்து வருகின்றன.


13 சதவீத வளர்ச்சி



மேலும் பல நிறுவனங்கள், தங்களுக்கு தேவையான புதிய பணியாளர்களை வேலைக்கு அமர்த்துவதை குறைத்துஉள்ளன. இதன் அடிப்படையில், 2022ம் ஆண்டு டிசம்பரில், முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில், 1 சதவீதம் குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால், எப்.ஐ.டி., எனும் 'பவுண்ட் இட் இன்சைடு டிராக்கர்' நிறுவனம் மேற்கொண்ட ஆய்வின்படி, கடந்த ஆண்டு டிசம்பரில் அதற்கு முந்தைய மாதங்களுடன் ஒப்பிடுகையில், பணியாளர் சேர்க்கையானது 2 சதவீதம் உயர்ந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

மேலும் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது:

சந்தைப்படுத்துதலில் எடுத்துக் கொண்ட கூடுதல் முயற்சிகளாலும், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை நடைமுறைப்படுத்தியதாலும், விளம்பரம், மக்கள் தொடர்பு, சந்தை ஆராய்ச்சி ஆகிய துறைகள், ஒவ்வொரு ஆண்டும் 9 சதவீத வளர்ச்சியும், மாதந்தோறும் 13 சதவீத வளர்ச்சியும் அடைந்து வருகின்றன.


சில்லரை விற்பனை



தொலைதொடர்புத் துறையில் '5ஜி' தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்பட்ட பிறகு, இத்துறையில் 9 சதவீதம் வேலைவாய்ப்புகள் அதிகரித்துள்ளன.

கடந்த ஆண்டு டிசம்பரில் இணைய உள்கட்டமைப்பு மற்றும் பாதுகாப்பை மேம்படுத்திட, திறமையான நிபுணர்களை மையமாகக் கொண்டு, 70ஆயிரம் வேலைகள் உருவாக்கப்பட்டுள்ளன. 5ஜி நெட்வொர்க் வளர்ச்சியானது, தொலைதொடர்பு மட்டுமின்றி, சில்லரை விற்பனை, சுகாதாரம், வாகனம் மற்றும் தொழில்துறை வரை பணியமர்த்துதலை பன்முகப்படுத்தியுள்ளது.

தொழில்துறை வளர்ச்சி, வலுவான கடன் முதலீடு, நாட்டின் நிதி வளர்ச்சி ஆகியவை காரணமாக வங்கி, நிதிச்சேவைகள், காப்பீடு உள்ளிட்ட துறைகளில், ஒவ்வொரு ஆண்டும் 7 சதவீத வளர்ச்சி ஏற்பட்டு வருகிறது.

மேலும் ரியல் எஸ்டேட், தங்கம் ஆகியவற்றின் மீதான மக்களின் விருப்பம் குறைந்து வருவதை அடுத்து, சேமிப்பு நிதியில் நாட்டம் ஏற்பட்டு, காப்பீட்டுத் துறையும் வளர்ச்சியடைந்து வருகிறது.

இந்தாண்டு தாக்கலாகும் மத்திய பட்ஜெட், பெரும்பாலான துறைகளில் கணிசமான வேலைகளை உருவாக்கும் என்று, பல்வேறு துறைகளைச் சார்ந்த ஆய்வாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X