மதுராந்தகம்:சென்னை- - திருச்சி தேசிய நெடுஞ்சாலையிலிருந்து அய்யனார் கோவில் வழியாக, பெரும்பாக்கம் எல்.எண்டத்துார் வரை செல்லும் சாலை உள்ளது.
இதில், மதுராந்தகம் வேளாண் துறை அலுவலகம் அருகே, சாலையோரம் மின் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
இதில், வேளாண் துறை அலுவலக வளாகத்தில் உள்ள மரங்களின் கிளைகள், மின் மாற்றியில் உரசிக்கொண்டு உள்ளன. இதனால், மின் கசிவு ஏற்பட்டு, விபத்து நிகழும் அபாயம் உள்ளது.
எனவே, மின் வாரியத் துறையினர், மரக்கிளைகளை வெட்டி அப்புறப்படுத்த, நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.