செங்கல்பட்டு:செங்கல்பட்டு கால்நடை பராமரிப்புத் துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில், ஒரு 'சுமோ' வாகனம், பிப்., 3ம் தேதி, ஏலம் விடப்படுகிறது.
இதுகுறித்து, மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் அறிக்கை:
செங்கல்பட்டில், கால்நடை பராமரிப்புத் துறை உதவி இயக்குனர் அலுவலகம் உள்ளது.
இந்த அலுவலக கட்டுப்பாட்டில் உள்ள, ஒரு 'டாடா சுமோ' வாகனம், வரும் பிப்., 3ம் தேதி, காலை 11:00 மணிக்கு, செங்கல்பட்டு கால்நடை மருத்துவமனை வளாகத்தில், ஏலம் விடப்படுகிறது.
ஏலத்தில் பங்கேற்போர், முன்பிணைத் தொகையாக, 2,000 ரூபாயை ரொக்கமாகவோ அல்லது வரைவோலையாக செலுத்த வேண்டும்.
மேலும் விபரங்களுக்கு, மேற்கண்ட அலுவலகத்தில், அலுவலக வேலை நாட்களில், காலை 11:00 மணி முதல் மாலை 5:00 வரை தெரிந்துகொள்ளலாம்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.