மதுராந்தகம்:அச்சிறுபாக்கம் அருகே மருவூர் அவென்யூ பகுதியில், பயன்பாடு இன்றி இருந்த கிணற்றில், ஆண் சடலம் கிடந்துள்ளது.
நேற்று, கிணற்றின் அருகே, பல மணி நேரமாக, 'ஹீரோ ஹோண்டா' இருசக்கர வாகனம் நிறுத்தப்பட்டிருந்துள்ளது.
அதைக் கண்ட பொதுமக்கள், கிணற்றில் பார்த்த போது, இறந்த நிலையில் ஆண் சடலம் மிதந்துள்ளது. இதனால், அச்சிறுபாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், தீயணைப்பு துறையினர், கிணற்றில் மிதந்த ஆண் சடலத்தை மீட்டு, விசாரணை மேற்கொண்டதில், இறந்த நபர் அச்சிறுபாக்கம் காந்தி நகர், மூன்றாவது தெருவைச் சேர்ந்த ஜோதி, 56, என தெரிய வந்துள்ளது.
இதையடுத்து, வழக்கு பதிவு செய்த போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.