சென்னை தீவுத்திடலில், 47வது இந்திய சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சி நடந்து வருகிறது. இங்கு, அரசு துறைகள் சார்பில், அரங்குகள் அமைக்கப்பட்டு உள்ளன. சமீபத்தில் காவல் துறை அரங்கில், மோப்ப நாய்களின் சாகச நிகழ்ச்சி நடந்தது.
பொருட்காட்சிக்கு வந்த மக்கள், திரண்டு நின்று வேடிக்கை பார்த்தனர். 'திருடர்களை நாய்கள் எப்படி பிடிக்கின்றன' என்ற செயல் விளக்க காட்சி நடந்தது. அப்போது நிகழ்ச்சிகளை விளக்கிய பெண் காவலர், 'அனைவரும் சாக்லேட் கொடுத்தால் தான், கை தட்டுவீர்களோ?' என கிண்டலாக கேட்டதும், அனைவரும் கை தட்டி உற்சாகப்படுத்தினர்.
இதைக் கேட்ட இளைஞர் ஒருவர், 'இவங்க மட்டும் புகார் கொடுக்க போறவங்க, ஏதாவது கொடுத்தால் தானே, வழக்குப் பதிவு செய்யுறாங்க... நாம மட்டும் சும்மா கை தட்டணும்னு எதிர்பார்க்கிறாங்களே' எனக் கூற, சுற்றி இருந்தோர் சிரித்தனர்.