சிறப்பு பகுதிகள்

டீ கடை பெஞ்ச்

ஆளுங்கட்சி நிர்வாகிகளுக்கு பொங்கல் பரிசு!

Added : ஜன 11, 2023 | |
Advertisement
''பதவிக்காக போட்ட ஒப்பந்தம் அம்பலமாகிடுத்து ஓய்...'' என்றபடியே, பெஞ்சில் அமர்ந்தார் குப்பண்ணா.''என்ன ஒப்பந்தம்னு விபரமா சொல்லுங்க பா...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.''திருப்பூர் மாவட்டம், பல்லடம் அடுத்த கரைப்புதுார் ஊராட்சியில, தி.மு.க.,வைச் சேர்ந்த கார்த்திகா துணைத் தலைவரா இருக்காங்க... தி.மு.க., கவுன்சிலர்களான மல்லிகா, சரண்யா, திவ்யா ஆகியோர், கார்த்திகாவுடன், 2019ல
டீக்கடை பெஞ்ச்.



''பதவிக்காக போட்ட ஒப்பந்தம் அம்பலமாகிடுத்து ஓய்...'' என்றபடியே, பெஞ்சில் அமர்ந்தார் குப்பண்ணா.

''என்ன ஒப்பந்தம்னு விபரமா சொல்லுங்க பா...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.

''திருப்பூர் மாவட்டம், பல்லடம் அடுத்த கரைப்புதுார் ஊராட்சியில, தி.மு.க.,வைச் சேர்ந்த கார்த்திகா துணைத் தலைவரா இருக்காங்க... தி.மு.க., கவுன்சிலர்களான மல்லிகா, சரண்யா, திவ்யா ஆகியோர், கார்த்திகாவுடன், 2019ல ஒரு, 'அக்ரிமென்ட்' போட்டிருந்தா...

''அதாவது, 'துணைத் தலைவர் பதவியில, முதல் இரண்டரை வருஷம் கார்த்திகாவும், அடுத்த இரண்டரை வருஷம், இந்த மூணு பேர்ல ஒருத்தரும் பதவி வகிக்கணும்'னு, 'ஸ்டாம்ப் பேப்பர்'ல எழுதி, கையெழுத்து வாங்கியிருந்தா ஓய்...

''இதுக்கு, தி.மு.க., நிர்வாகிகள் சிலர் சாட்சி கையெழுத்தும் போட்டிருக்கா... இரண்டரை வருஷம் முடிஞ்ச நிலையில, 'பதவி விலக முடியாது'ன்னு கார்த்திகா மறுக்க, நாலு பேருக்கும் முட்டிண்டுடுத்து...

''இதனால, ஒப்பந்த பத்திரத்தை அவாளே சமூக வலைதளத்துல வெளியிட்டுட்டா... தேர்தல் விதிகளை மீறி, ஆளுங்கட்சியினர் போட்ட அக்ரிமென்ட், மேலிடம் வரைக்கும் போயிடுத்து ஓய்...'' என, முடித்தார் குப்பண்ணா.

''தலையை விட்டு வாலை பிடிச்சா, குற்றம் குறையுமாங்க...'' எனக் கேட்டபடி, அடுத்த தகவலை ஆரம்பித்தார் அந்தோணிசாமி.

''விபரமா சொல்லும் ஓய்...'' எனக் கேட்டார், குப்பண்ணா.

''சேலம் மாவட்டத்துல, 'குட்கா, ஹான்ஸ்' பாக்கெட்டுகள் பரவலாக எல்லா கடைகள்லயும் கிடைக்குது... லாட்டரி சீட்டு, சாராயம், சந்துக்கடை மது விற்பனை, 24 மணி நேரமும் பரபரப்பா நடக்குதுங்க...

''தினமும் கணக்கு காட்டணும்கிறதுக்காக, அஞ்சு முதல் 10 பேர் வரை, போலீஸ்காரங்க சம்பிரதாயத்துக்கு, 'அரெஸ்ட்' செய்றாங்க... வேண்டியவங்களை சொந்த, 'ஜாமின்'ல அனுப்பிடுறாங்க... துட்டு தேறாதவங்களை மட்டும் ஜெயில்ல தள்ளிடுறாங்க...

''இந்த பொருட்களை, 'சப்ளை' செய்ற பெரிய வியாபாரிகள் ஒருத்தர் கூட இதுவரை கைதானது இல்லை... சின்ன சின்ன வியாபாரிகளை கைது செஞ்சு கணக்கு காட்டுறாங்க... வாலை விட்டுட்டு, தலையை பிடிச்சா தான், குட்கா பொருட்கள் புழக்கத்தை தடுக்க முடியுங்க...'' என்றார், அந்தோணிசாமி.

''ஆளுங்கட்சிக்காரங்க உற்சாகத்துல இருக்காவ வே...'' என்ற அண்ணாச்சியே தொடர்ந்தார்...

''தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பை, முதல்வர் ஸ்டாலின், 9ம் தேதி துவக்கி வச்சாருல்லா... அதுக்கு முந்தைய நாள், ஆளுங்கட்சி நிர்வாகிகளுக்கு, கட்சி மற்றும் அமைச்சர்கள் தரப்புல இருந்து, பொங்கல் பரிசு கொடுத்து அசத்திபுட்டாவ வே...

''நகர, ஒன்றிய செயலர்களுக்கு தலா, 1.50 லட்சம் ரூபாயும், வட்டச் செயலர், கவுன்சிலர்களுக்கு தலா, 25 ஆயிரம் ரூபாயும், வட்டப் பிரதிநிதிகள், பிற ஒன்றிய, நகர நிர்வாகிகளுக்கு தலா, 10 ஆயிரம் ரூபாயும் ரொக்கமா குடுத்து குஷிப்படுத்திட்டாவ வே...'' என்றார், அண்ணாச்சி.

''கட்சிக்காராளுக்கு இதெல்லாம் ஒரு மேட்டரே இல்லன்னாலும், பொங்கல் பரிசோல்லியோ... குஷியாத்தான் இருப்பா ஓய்...'' என குப்பண்ணா கூற, சிரித்தபடியே சபை கலைந்தது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது





வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X