பள்ளிப்பட்டு:பள்ளிப்பட்டு அரசு மருத்துவமனை, பள்ளிப்பட்டு நகருக்கு வெளியே, கோனேட்டம்பேட்டை கிராமத்தில் அமைந்துஉள்ளது.
நகரில் இருந்து, 4 கி.மீ., தொலைவில் உள்ள மருத்துவமனைக்கு, பள்ளிப்பட்டில் இருந்து, ஆட்டோ மற்றும் பேருந்தில், பொதுமக்கள் சென்று சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஆனால், மருத்துவமனை நுழைவாயில் அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில், நிழற்குடை இல்லாததால், மருத்துவமனைக்கு வரும் முதியவர்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
காத்திருக்க, இருக்கை மற்றும் குடிநீர் வசதியுடன் நிழற்குடை அமைக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.