திருமழிசை:திருமழிசை பேரூராட்சிக்குட்பட்ட ஒன்பதாவது வார்டு பகுதியைச் சேர்ந்தது மேட்டுத்தாங்கல். இப்பகுதியில் அடிப்படை வசதிகளான சாலை, குடிநீர், மின் விளக்கு, கழிவு நீர் கால்வாய் வசதி கேட்டு, 10 ஆண்டுகளாக பொதுமக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
மேலும், அடிப்படை வசதிகள் கேட்டு, பேரூராட்சி நிர்வாகம், கலெக்டர், முதல்வரின் தனிப்பிரிவிற்கும் புகார் மனு அளித்துஉள்ளனர்.
ஆனால், இன்று வரை எவ்வித நடவடிக்கையும மேற்கொள்ளாதது பொதுமக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எனவே, மாவட்ட நிர்வாகம், திருமழிசை பேரூராட்சியின் அப்பகுதியில் ஆய்வு செய்து அடிப்படை வசதிகள் செய்துதர தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மேட்டுத்தாங்கல் மக்கள் எதிர்பார்க்கின்றனர்.