திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த, கட்டுமான தொழிலாளர்களுக்கு மூன்று மாதம் மற்றும் ஒரு வார திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
வாரியத்தில், உறுப்பினராக பதிவு செய்து மூன்று ஆண்டு நிறைவு பெற்ற, 5ம் வகுப்பு முதல், பிளஸ் 2 வகுப்பு, ஐ.டி.ஐ., படித்த, 18 - 40 வயதிற்குள் உள்ளோர் விண்ணப்பிக்கலாம்.
இலவசம்
பயிற்சி கட்டணம், உணவு, தங்குமிடம் இலவசம். பயிற்சி பெறும் அனைவருக்கும் தனியார் கட்டுமான நிறுவனத்தில் வேலை வழங்கப்படும்.
கொத்தனார், வெல்டர், மரவேலை, கம்பி வேலை, கார்பென்டர் உள்ளிட்ட பயிற்சி அளிக்கப்படும்.
முதல் மாத பயிற்சி மற்றும் கடைசி ஒரு வார திறன் மேம்பாட்டு பயிற்சி, தையூர் கட்டுமான கழக பயிற்சி நிறுவனத்திலும், அடுத்த இரண்டு மாதம், காஞ்சிபுரம் மாவட்டம், நீவளூரில் உள்ள எல்.அண்ட்.டி., கட்டுமான திறன் பயிற்சி நிலையத்திலும் நடைபெறும்.
பயிற்சியில் பங்கேற்பவர்களுக்கு நாளொன்றுக்கு 800 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும்.
நேரில் விண்ணப்பம்
விண்ணப்பதாரர் தங்கள் நலவாரிய அட்டை, கல்விச் சான்றிதழ், ஆதார் மற்றும் குடும்ப அட்டை உள்ளிட்ட நகல்களுடன், திருவள்ளூர் மற்றும் பொன்னேரியில் செயல்பட்டு வரும் தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகத்தில் நேரில் விண்ணப்பிக்குமாறு, உதவி ஆணையர்கள், கமலா - திருவள்ளூர், வரதராஜன் - பொன்னேரி தெரிவித்து உள்ளனர்.