திருமழிசை:திருமழிசை பேரூராட்சிக்குட்பட்ட பிரையாம்பத்து பகுதியில் வரும் 16ம் தேதி பொங்கல் திருநாளை முன்னிட்டு, விழாக் குழு நண்பர்கள் சார்பாக, 11ம் ஆண்டு தமிழர் பாரம்பரிய விளையாட்டு போட்டிகள் நடைபெற உள்ளன.
காலை 8:00 மணி முதல் நடைபெறும் விளையாட்டு போட்டியில், 4 - 6 வயது வரை மியூசிக்கல் சேர், பந்து பிடிக்கும் போட்டி, 7 - 9 வயது வரை லெமன் ஸ்பூன், தண்ணீர் பந்து பிடிக்கும் போட்டி, 9 - 13 வயது வரை ஊசி நுால் கோர்க்கும் போட்டி, பலுான் ஊதும் போட்டி, நொண்டி ஓட்டம், 14 வயதுக்கு மேல் ஆண்களுக்கு வாத்து பிடிக்கும் போட்டி, உப்புமூட்டை துாக்கும் போட்டி, உறியடித்தல் போன்ற போட்டிகள் நடைபெறும்.
14 வயதுக்கு மேல் பெண்களுக்கு கோலப்போட்டி, தீபம் ஏற்றும் போட்டி, உப்பு மூட்டை துாக்கும் போட்டிகள் நடைபெறும்.
போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு, மாலை 6:00 மணிக்கு மேல், முதல் மூன்று இடங்களுக்கான பரிசுகள் வழங்கப்படும் என, அப்பகுதியைச் சேர்ந்த நண்பர்கள் குழுவினர் தெரிவித்துள்ளனர்.