புதுடில்லி:சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவு தொடர்பாக ஏற்பட்ட கோஷ்டிச் சண்டையில் மூன்று சிறுவர்கள் கத்தியால் குத்தப்பட்டனர்.
புதுடில்லி ஜஹாங்கீர்புரி பகுதியில் நேற்று முன் தினம் மாலை, சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவு தொடர்பாக இரு கோஷ்டிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. ஒருகட்டத்தில், ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர்.
இதில், மூன்று சிறுவர்களுக்கு கத்திக் குத்து விழுந்தது. தகவல் அறிந்து வந்த போலீசார், காயம் அடைந்த சிறுவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுதொடர்பாக, எட்டு சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.