காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் - -வந்தவாசி சாலை, பெருநகரில், பட்டுவதனாம்பிகை உடனாகிய பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் தைப்பூச திருவிழா, 10 நாட்கள் நடைபெறும்.
இதில், 10ம் நாள், தைப்பூச ஆற்று திருவிழாவில், செய்யாற்றில், பெருநகரை சுற்றியுள்ள, 20 ஊர் சுவாமிகள் எழுந்தருளும், தைப்பூச தரிசனம் நடைபெறும்.
நடப்பாண்டு தைப்பூச திருவிழா, வரும், 27ல் கொடியேற்றத்துடன் துவங்க உள்ளது.
முதல் நாள், இரவு உற்சவத்தில் சுவாமி சிம்ம வாகனத்தில் வீதியுலா வருவார். நுாற்றாண்டுகளை கடந்தும் பயன்பாட்டில் உள்ள சிம்ம வாகனத்தின், இரு கைகளும் மற்றும் சுவாமி அமரும் பீடம் சிதிலமடைந்த நிலையில் இருந்தது.
தைப்பூச விழா துவங்க உள்ள நிலையில், சிதிலமடைந்து, பொலிவிழந்த நிலையில் இருந்த சிம்ம வாகனம், பழமை மாறாமல் புதுப்பித்து புதிதாக வர்ணம் தீட்டப்பட்டு புதுப்பொலிவு பெற்று, சுவாமி வீதியுலா செல்ல தயார் நிலையில் உள்ளது.