தாம்பரம்:தாம்பரம் மாநகராட்சியில், ஐந்து மண்டலங்களும், 70 வார்டுகளும் உள்ளன.
இதில், தி.மு.க., கவுன்சிலர்களின் எண்ணிக்கை அதிகம். இம்மாநகராட்சியில், கோஷ்டி பூசல் நிலவுவதால், ஒரு வார்டில் கூட பொதுமக்கள் புகார் தெரிவிக்கும் பணிகள் முழுமையாக நடப்பதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இது குறித்து, கவுன்சிலர்கள் கூறியதாவது:
ஒவ்வொரு வார்டிலும் வரும் புகார்கள் குறித்து, நாங்கள் அதிகாரிகளுக்கு தெரிவிக்கிறோம். சிறிய பணிக்கு கூட, நடையாய் நடக்க வேண்டியுள்ளது.
இதுவே, எம்.எல்.ஏ., கூறினால், உடனடியாக நடக்கிறது.
நாங்களும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் தான். அதிகாரிகளின் இந்த அலட்சியப்போக்கால், ஓட்டு போட்ட மக்களுக்கு பதில் கூற முடியாத நிலைமை உருவாகியுள்ளது.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.