புத்தகக் கண்காட்சியில் அரங்கு எண் - எப்57ல், சென்னையில் இயங்கும் அமெரிக்க துாதரகத்தின் அரங்கு செயல்படுகிறது. இதில், மாணவர்களுக்கு அமெரிக்காவில் உள்ள உயர் கல்வி, வேலைவாய்ப்புகள், விசா நடைமுறைகள் குறித்து விளக்கம் அளிக்க ஆட்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன், 'என் கனவு' என்ற அடிப்படையில் 'செல்பி' அரங்கமும் செயல்படுகிறது. மேலும், மாணவர்களின் ஓவியங்கள், கவிதைகள், கட்டுரைகள், பேச்சு திறனை வெளிப்படுத்தும் வகையில் போட்டிகளும் நடத்தப்படுகின்றன.
'சூப்பர் ஹீரோ' என்ற தலைப்பில், மாணவர்களின் படைப்புகளுக்கு வாய்ப்பளிக்கப்படுகிறது.
'பன்முகத்தன்மை உள்ள நம் எதிர்காலம்' என்ற தலைப்பில் படைப்புகளையும் வரவேற்கின்றனர். தினமும், மாலை 3:30 மணி முதல் 4:30 மணி வரை, இளைஞர்களின் கதை நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில், மாணவர்கள், இளைஞர்கள் தங்களின் கற்பனைக் கதைகளை ஆங்கிலத்தில் கூறலாம்.
மாலை 4:00 மணி முதல் 6:00 மணி வரை, 'உள்ளடக்கமும் பன்முகத்தன்மையும்' என்ற தலைப்பில், கல்லுாரி மாணவர்கள் ஆங்கிலத்தில் கவிதை வாசிக்கலாம். தமிழ் கவிதைப் போட்டிகளும் அறிவிக்கப்பட உள்ளன.
அதேபோல மாலை 5:00 மணி முதல் 7:00 மணி வரை, அமெரிக்க உயர்கல்வி குறித்த ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன.
மேலும், சென்னையில் உள்ள அமெரிக்க துாதரக நுாலகத்தில் உறுப்பினராவது, குறித்தும், அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா குறித்தும் மாணவர்கள் அறிய வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
- நமது நிருபர் -