சாஸ்திரி நகர்:பெசன்ட்நகர், கடற்கரை அருகே, சாலையோரம் நின்ற ஒரு வாகனத்தில் இருந்து, சில மூட்டைகள் நேற்று முன்தினம் இறக்கப்பட்டன. சாஸ்திரிநகர் போலீசார், சந்தேகத்தின்படி, மூட்டையை இறக்கியவர்களிடம் விசாரித்தனர்.
அவர்கள், முன்னுக்குபின் முரணாக பதில் கூறினர். மூட்டையை சோதனை செய்தபோது, அதில், தடைசெய்யப்பட்ட குட்கா, ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலை வஸ்துக்கள் இருந்தன.
விசாரணையில், வெளி மாநிலங்களில் இருந்து கடத்தி வந்து, அடையாறு சுற்றுவட்டார பகுதியில் விற்பனை செய்வது தெரிந்தது.
இது தொடர்பாக, அரியலுாரைச் சேர்ந்த நபிமுகம்மது, 42, இளையராஜா, 32, ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
வாகனத்தில் இருந்த, 430 கிலோ புகையிலை பறிமுதல் செய்யப்பட்டது.