சென்னை:ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகளில் ஒன்றான துபாயில் இருந்து, இலங்கை வழியாக 'ஸ்ரீலங்கன் விமானம்' நேற்று முன்தினம் சென்னை வந்தது. இதில் வரும் பயணி ஒருவர் தங்கம் கடத்தி வருவதாக, சுங்க அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து சந்தேகம் அளிக்கும் வகையில், விமான நிலையத்தை விட்டு வெளியேற முயன்ற பயணி ஒருவரை, சுங்க அதிகாரிகள் இடைமறித்து சோதனை செய்தனர்.
அப்போது, அவர் எடுத்து வந்த 'லேப்டாப்' சார்ஜருக்குள் தங்கம் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை பறிமுதல் செய்து மதிப்பிட்டதில், 39.54 லட்சம் ரூபாய் மதிப்பிலான, 809 கிராம் தங்கம் இருந்தது.
மேலும், 3.50 லட்சம் ரூபாய் மதிப்பிலான, 57 மொபைல் போன்களும் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தங்கம் மற்றும் மொபைல் போன்களை பறிமுதல் செய்த சுங்க அதிகாரிகள், அந்த நபரை கைது செய்து விசாரிக்கின்றனர்.