திண்டிவனம் : திண்டிவனம் கோட்டத்தில் அனைத்து மின் இணைப்புகளுடன் ஆதார் எண் இணைக்கும் முகாம் நடப்பதால் பொது மக்கள் பயன்படுத்திக்கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து திண்டிவனம் மின்துறை செயற்பொறியாளர் செந்தில்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு;
திண்டிவனம் கோட்டத்திற்குட்பட்ட அனைத்து பிரிவு அலுவலகங்களிலும் தினமும் காலை 8;00 மணி முதல் மாலை 5;00 மணி வரை நுகர்வோர் மின் இணைப்புகளுடன் ஆதார் எண் இணைக்கும் சிறப்பு முகாம் நடந்து வருகிறது.
மின் இணைப்பு உரிமையாளர்கள், குடியிருந்து வரும் வாடகைதாரர்கள் ஆதார் அட்டையுடன் அந்தந்த மின் கட்டணம் செலுத்தும் பிரிவு அலுவலகத்தில் காண்பித்து ஆதார் எண்ணை இணைத்து பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மேலும், நுகர்வோர் வசதிக்காக சம்பந்தப்பட்ட பிரிவு அலுவலகங்களில் வாட்ஸ்-அப் எண்ணிற்கு, மின் கட்டண அட்டையுடன் ஆதார் அட்டையை இணைத்து ஒரே புகைப்படமாக எடுத்து அனுப்பும் பட்சத்தில் அதை இணைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அந்தந்த நுகர்வோர், தங்கள் பகுதிக்கு கொடுக்கப்பட்ட மொபைல் எண்ணிற்கு அனுப்ப வேண்டும். திண்டிவனம் நகரம்-(1) 9445855837, நகரம் (2) 9445855838, மானுார்-9445855839, ஊரல்-9445855840, பிரம்மதேசம் மற்றும் நல்லாளம்-9445855841, ஜக்காம்பேட்டை-94458 55842, கிளியனுார் - 94458 55845, உப்புவேலுார் - 9445855846, முருக்கேரி மற்றும் நடுக்குப்பம் - 94458 55847, மரக்காணம் - 94458 55848, அனுமந்தை - 94458 55849, தீவனூர்- 9445855851, வடசிறுவலுார் - 9445855852, வெள்ளிமேடுப்பேட்டை - 9445855853, கொள்ளார்- 9445855854, ஆவணிப்பூர் - 9499050365, சாரம்-9445855855, செண்டூர் - 9445856162, பெரியதச்சூர்- 9445855859, வீடூர்-9445855860, மயிலம் - 9445855861, ரெட்டணை - 9445855862, வி.பரங்கனி- 9445855863, திருவக்கரை-9499050366 ஆகிய மொபைல் எண்களில், அனுப்ப வேண்டும்.
இவ்வாறு செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.