குள்ளஞ்சாவடி : குள்ளஞ்சாவடி அரசுப் பள்ளியில் முப்பெரும் விழா நடந்தது.
குள்ளஞ்சாவடி அரசு மேல்நிலைப் பள்ளியில் வள்ளலார் 200வது பிறந்த நாள் விழா, சமத்துவ பொங்கல், நம்ம ஸ்கூல் துவக்க விழா என, முப்பெரும் விழா, நடந்தது.
மாவட்ட கல்வி குழு தலைவர் சிவகுமார் தலைமை தாங்கினார். வடலுார் நகராட்சி சேர்மன் சிவக்குமார், பி.டி.ஓ.,க்கள் சிவஞானசுந்தரம், சதீஷ்குமார், ஒன்றிய கவுன்சிலர் ராஜபாண்டியன், வழுதலம்பட்டு ஊராட்சி தலைவர் கலைச்செல்வி ராஜேந்திரன், தலைமை ஆசிரியர் கொளஞ்சியப்பன், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள், பள்ளி மேலாண்மை குழுவினர், வழுதலம்பட்டு ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
வழுதலம்பட்டு ஊராட்சி செயலர் சங்கர் நன்றி கூறினார்.