பண்ருட்டி : பண்ருட்டி அருகே டாஸ்மாக் கடையில் கொள்ளையடிக்க திட்டமிட்டவரை போலீசார் கைது செய்தனர்.
பண்ருட்டி அடுத்த காடாம்புலியூர் இன்ஸ்பெக்டர் ராஜதாமரைபாண்டியன் தலைமையிலான போலீசார் ரோந்து சென்றனர். பனிக்கன்குப்பம் சந்தைதோப்பு பகுதியில் கத்தி, கம்பி உள்ளிட்ட ஆயுதங்கள் வைத்திருந்த 5 பேர் கொண்ட கும்பல் போலீசாரை கண்டதும் தப்பி ஓடியது.
போலீசார் விரட்டி ஒருவரை பிடித்தனர். அவர், சிறுதொண்டமாதேவி சாமிநாதன்,30; என்பதும், தப்பி ஓடியவர்கள் காடாம்புலியூர் மணிகண்டன், மணிமாறன், கருக்கை ராஜிவ்காந்தி, வேணுகோபாலன் ஆகியோர் என தெரியவந்தது. அவர்கள், டாஸ்மாக் கடையில் கொள்ளையடிக்க திட்டமிட்டது தெரியவந்தது.
இதுகுறித்து காடாம்புலியூர் போலீசார் வழக்குபதிந்து சாமிநாதனை கைது செய்தனர். மற்றவர்களை தேடி வருகின்றனர்.