கண்டமங்கலம் : கண்டமங்கலம் ஒன்றியம் சின்னபாபுசமுத்திரம் ஊராட்சியில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் விழா நடந்தது.
சின்னபாபுசமுத்திரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, தி.மு.க., மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் டி.என்.ஏ தமின், தி.மு.க., கிளை செயலாளர்கள் கருணாநிதி, முருகன், அவைத்தலைவர் ஜெயபாலன், மா.கம்யூ., கட்சியின் முன்னாள் ஒன்றிய செயலாளர் ஏழுமலை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டுறவு சங்க செயலாளர் புருேஷாத்தமன் வரவேற்றார். கண்டமங்கலம் ஒன்றிய துணை சேர்மன் நஜீராபேகம் தமின் பயனாளிகள் 3 ஆயிரம் பேருக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் தி.மு.க., ஒன்றிய பிரதிநிதி ராஜேந்திரன், பொருளாளர் ஏழுமலை, துணை சேர்மனின் நேர்முக உதவியாளர் சுரேஷ், கூட்டுறவு சங்க எழுத்தனர்கள் ஆறுமுகம், ஞானசேகர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.