சேத்தியாத்தோப்பு : சேத்தியாத்தோப்பு அடுத்த பாளையங்கோட்டையில் சிறப்பு கால்நடை மருத்துவ முகாம் நடந்தது.
கால்நடைபராமரிப்புத்துறை, சுப்ரீம் அரிமா சங்கம் சார்பில், நடந்த முகாமில், ஸ்ரீமுஷ்ணம் தவஅழுதம் பள்ளி நிர்வாகி சாலை கனனதாரன் தலைமை தாங்கினார். வடக்குப்பாளையம் துாய இருதய மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் ஜேசுராஜ், சுப்ரீம் லயன் சங்க தலைவர் ஆரோக்கியஜெயக்குமார், செயலாளர் செல்வராஜ், பொருளாளர் ஆரோக்கியபாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பாளையங்கோட்டை மறைவட்ட அதிபர் அகஸ்டின் முகாமினை துவக்கி வைத்தார். முகாமில், வடக்குப்பாளையம், தெற்குபாளையம், கீழ்பாதி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து 100க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு மருத்துவர்கள் மலடு நீக்க மாத்திரை மருந்துகள் வழங்கினர்.