திண்டிவனம் : திண்டிவனம் டவுன் போலீஸ் நிலையத்தில் விழுப்புரம் எஸ்பி ஸ்ரீநாதா நேற்று இரவு ஆய்வு செய்தார்.
ஆய்வின்போது போலீஸ் நிலையத்தில் பராமரிக்கப்படும் ஆவணங்களை பார்வையிட்டு, போலீசார் குற்ற வழக்குகள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும், திண்டிவனத்தில் ரவுடிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
ஆய்வின் போது டவுன் இன்ஸ்பெக்டர் கலையரசி, சப்-இன்ஸ்பெக்டர்கள் ஆனந்தராசன், வினோத்ராஜ், பாக்கியலட்சுமி மற்றும் போலீசார்கள் உடனிருந்தனர்.