குள்ளஞ்சாவடி : குள்ளஞ்சாவடி அடுத்த, வழுதலம்பட்டு ஊராட்சியில், 100 நாள் வேலை திட்ட பணியாளர்களுக்கு இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது.
கடலுார் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் சார்பில், தெற்கு வழுதலம்பட்டு அங்கன்வாடியில் நடந்த இம்முகாமில், வடக்கு மற்றும் தெற்கு வழுதலம்பட்டு பகுதி, 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள், 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
அவர்களுக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டது. பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கு கண் புரை அறுவை சிகிச்சை செய்யப்படும் என, வட்டார கண் மருத்துவர் மகேஷ் தெரிவித்தார். நாளை கருமாச்சிப்பாளையம் காலனி பகுதியில் உள்ள பணியாளர்களுக்கு கண் பரிசோதனை முகாம் நடக்கிறது.